பதட்டமான வாக்குசாவடிகள் குறித்து ஆர்டிஒ ஆலோசனை

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆரணி ஆர்டிஒ தனலட்சுமி ஆலோசனை

Update: 2023-12-07 02:59 GMT

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆர் டி ஓ ஆலோசனை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி ஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி, செஞ்சி மற்றும் மயிலம் உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது. பதட்டமான வாக்குச் சாவடிகள் நிறைந்த பகுதிகள் குறித்து நாடாளுமன்ற தேர்தலில் முன்கூட்டியே கண்டறிதல் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகள் ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலின்பேரில் தி.மலை மாவட்டத் திலுள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளான தி.மலை மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் ஆட்சி யர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கி, ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உள்ளடக்கிய ஆரணி, போளூர் மற்றும் சேத்பட்டு தாலுகாவில் காவல் மற்றும் வருவாய் ஆகிய அதிகாரிகளுடன் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிதல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத் தில் போளூர் காவல் துணை கண் காணிப்பாளர் கோவிந்தராஜ், கோட்டாட்சியரின் நேரமுக உதவியாளர் செந்தில்குமார், ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா, ஆரணி நகராட்சி ஆணையாளர் குமரன், நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் தமிழரசி, கிராமிய காவல் உதவி ஆய்வாளர் ஷாபூதின், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News