நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசுக்கடைகளை ஆர்டிஓ ஆய்வு
நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளில் ஆர்டிஓ ஆய்வு செய்தார்.
By : King 24x7 Website
Update: 2023-10-31 09:56 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகஅரசு உத்தரவுப்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவுறுத்த லின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனைக் கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுநடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதி நேற்றும், இன்றும், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் பொருப்பில் உள்ள சத்திய பால கங்காதரன் தலைமையில் , பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், பெரம்பலூர் மாவட்ட தீய ணைப்புதுறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி, பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் துர்காதேவி, சிறப்பு வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியேர் கொண்ட குழுவினர், பெரம்பலூர் கடை வீதி, பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் தெரு, ஆகியப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள உள்ள பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைக்கு உட்பட்டு, உரிமத்துடன் பட்டாசுகள் வைக்கப்பட்டுள் ளதா என்பதை பார்வையிட் டனர், மேலும் கடைகளில் தீத் தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் உள்ளதா, அவசரகால வழிகள் உள்ளதா, என்பதுகுறித்தும் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தனர். இதன் எடுத்து பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் அரசு விதியை மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.