திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.

Update: 2023-12-17 13:40 GMT

தேர்வு எழுதும் மாணவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தேர்வில் 2,452 மாணவா்கள் கலந்து கொண்டனா்.ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவா்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நிகழ் கல்வி ஆண்டுக்கான (2023-24) ஊரகத் திறனாய்வுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. தேர்வுக்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தோவில், 2,452 மாணவா்கள் பங்கேற்றனா். 44 மாணவா்கள், 61 மாணவிகள் என மொத்தம் 105 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Tags:    

Similar News