சாக்கோட்டையில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சாக்கோட்டையில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 11:53 GMT
சிவகங்கை மாவட்டம், புதுவயல் அருகே உள்ள சாக்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வீரசேகர உமையாம்பிகை திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனித் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது .
திருவிழா காலங்களில் தினம்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் மூன்று தேர்களில் சுவாமிகள் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேரில் விநாயகப் பெருமானும், 2வது தேரில் வீரசேகர உமையாம்பிகையும், மூன்றாவது தேரில் அம்பாள் ஆகியோர் மூன்று தேர்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்களுடன் தேரோடு வீதியில் வலம் வந்து தேர்கள் நிலை பெற்றது. இந்த தேரோட்டத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் .