கள்ளசந்தையில் மது விற்பனை

ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்ப பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2024-01-27 12:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த ஊத்தங்கரை நகர அவை துணைத் தலைவர் திராவிட மணி என்ற நபர் டாஸ்மாக் கடையின் பார் அனுமதி பெற்று வியாபாரம் செய்து வந்த சூழ்நிலையில், கடந்த 25 மற்றும் 26 ஆம் தேதி வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து வந்த நிலையில், ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் அருகே பார் அனுமதி பெற்று நடத்தி வந்த திராவிட மணி என்ற நபர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பல ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்துள்ளார். திராவிட மணி, அன்பழகனை மது விற்கக் கூடாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார், பாதிக்கப்பட்ட அன்பழகன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அரசு விடுமுறை தினத்தில் கள்ளச் சந்தையில் பார் எடுத்து நடத்தி வரும் தி.மு.க. பிரமுகர் திராவிட மணி அராஜகத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ பகுதிக்கு தற்போது வரையிலும் காவல்துறையினர் யாரும் செல்லாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்கையில் திமுக கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறையினர் யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News