கஞ்சா விற்பனை - 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது !
கஞ்சா விற்பனை ஈடுப்பட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மதுரவாயல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் தலைமையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த துண்டலம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து மதுரவாயல் அடுத்த துண்டலம், சன்னதி தெருவை சேர்ந்த ராஜ்குமார்(23), பிரசாந்த்(24), இருவரும் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். அசோக்(23), ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது மூன்று பேரும் சேர்ந்து கொண்டு திருத்தணியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி பகுதி நேரமாக கல்லூரிக்கு சென்று விட்டு வருவதும் முழு நேரமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர் முழுக்க, முழுக்க கல்லூரி மாணவர்களை குறி வைத்து இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.