அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை!
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையில் நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-24 09:15 GMT
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.