குட்கா விற்பனை - கடைகளுக்கு சீல்

கழுகுமலை, நாலாட்டின்புத்தூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

Update: 2024-01-05 05:55 GMT

குட்கா 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆறுமுகம் நகர் ராணி வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த குருசாமி மகன் பாலமுருகன்(51). இவர் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கழுகுமலை போலீசாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி ஜோதிபாசு தலைமையில் உணவு  பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இதேபோன்று நாலாட்டின்புத்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள நடராஜ்(56) என்பவரது பெட்டிக்கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த பெட்டி கடையையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News