சட்டவிரோத போதை பொருள் விற்பனை – ஒருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம்,புதுக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியவரை கைது செய்தனர்.

Update: 2024-01-28 05:59 GMT
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கைதானவர்

குமரி மாவட்டம் ,புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து மது, மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்வதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் போலீசார் கணபதியன் கடவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற ஒரு இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாத 23 கிலோ போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று நடத்திய விசரணையில் இந்த புகையிலை பொருட்களை பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிய வந்தது.

புதுக்கடை போலீசார் புகையிலை பொருட்களை கொண்டு சென்ற உதயமார்த்தாண்டம் அருகே மிடாலம் பகுதி நடராஜன் மகன் சுந்தர் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News