அத்துமீறி பிளாஸ்டிக் விற்பனை; கடைகளுக்கு அபராதம்
குழித்துறையில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் அத்துமீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Update: 2024-03-06 00:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என நகராட்சி ஆணையர் ராமதிலகம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பெயரில் சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் குழித்துறையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து 4 கடைகளுக்கு ரூபாய் 22,500 அபராதம் விதித்த அதிகாரிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.