ஆங்காங்கே மதுபாட்டில்கள் விற்பனை !

திண்டுக்கல்லில் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2024-04-18 12:21 GMT

மதுபாட்டில்கள் விற்பனை

தமிழகம் முழுவதும் நாளை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளும் 4 நாளைக்கு மூட உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே மதுபாட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அதிகாரிகள் மதுவிலக்கு போலீசார் ரோந்து செல்லாமல் நீண்ட தூக்கத்தில் உள்ளனர். இதை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் பல மதுபாட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியை செய்து வருகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: மது பாட்டில் விற்பவர்கள் பலர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணற வேண்டி உள்ளது. நாங்கள் பிடித்தாலும் அவர்கள் பல வழிகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News