தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை

திண்டுக்கல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு 'சீல்' வைத்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

Update: 2024-02-21 05:07 GMT

புகையிலைப் பொருள்கள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமாா், ஜாபா் சாதிக் ஆகியோா் திண்டுக்கல் அருகேயுள்ள பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மீனாட்சிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, நத்தம் விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இந்த சோதனையின்போது, 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக பிடிபட்ட 14 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதமும். 2-ஆவது முறையாக பிடிபட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.50ஆயிரம் என மொத்தம் ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 16 கடைகளையும் மூடி அலுவலா்கள் 'சீல்' வைத்தனா்.
Tags:    

Similar News