மானிய விலை பாரத் அரிசி விற்பனை - பொதுமக்கள் வரவேற்பு
தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
Update: 2024-03-03 11:55 GMT
அரிசி பருப்பு கோதுமை மாவு வெளி சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நாபர்டு மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கும், கடலை பருப்பு 1 கிலோ 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்தை தெப்பகுளத் தெரு பஜனை மட காரியதரிசி எஸ்.ஆர்.எஸ். பாலாஜி, வீர வாஞ்சி தேச பக்த பேரவை நிறுவன அமைப்பாளர் ரெங்கராஜன் பாலாஜி மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி அலுவலர் குருமூர்த்தி வரவேற்றனர். மானிய விலை அரிசி, கோதுமை, கடலை பருப்பு போன்ற பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்கள் அரசின் சேவையை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஏரல் பகுதி பாஜகவின் நபார்டு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.