தரமற்ற குடிநீர் விற்பனை : உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ஆய்வு
பேராவூரணியில் தரமற்ற குடிநீர் விற்பனை எனப் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா ஆகியோருக்கு புகார்கள் வந்தன. இ
தையடுத்து உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில், பேராவூரணி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மினி வேன்களில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் வைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கிராமப்புறங்களில் வைத்து விற்பனை செய்த 3 நிறுவனங்களின் வேன்களை தடுத்து நிறுத்தி,
தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் கூறுகையில், தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளின் அடிப்படையில உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவகங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், பால் விற்பனை செய்தவரிடம்,
இருந்து ஆய்வு செய்யப்பட்டு தரம் குறைந்த 25 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.