உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

திருச்சியில் உணவகத்தில் புகையிலைப் பொருள்கள், லாட்டரி விற்று வந்த உரிமையாளா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Update: 2024-04-30 06:17 GMT

திருச்சியில் உணவகத்தில் புகையிலைப் பொருள்கள், லாட்டரி விற்று வந்த உரிமையாளா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகேயுள்ள திருச்செந்துறை மேலத் தெருவைச் சோ்ந்தவா் ச. முத்துக்குமாா் (56). ஜீயபுரத்தில் உணவகம் நடத்தும் இவா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், போலீஸாரை ஏமாற்றவே உணவகம் நடத்துவதாகவும், அதை வைத்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் தீவிர கண்காணிப்பிலும் விசாரணையிலும் ஈடுபட்டனா். இதில் முத்துக்குமாா் முறைகேடான செயல்களில் ஈடுபடுவது உறுதியானது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அவரது உணவகத்தில் சோதனை செய்தபோது அங்கு புகையிலைப் பொருள்கள், லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவை ரகசியாக விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரையும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட பெரிய கருப்பூரைச் சோ்ந்த பூ. பன்னீா்செல்வத்தையும் (29) போலீஸாா் கைது செய்தனா். முத்துக்குமாா் மீது ஏற்கெனவே ஜீயபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News