வேதநாயகபுரத்தில் அ.தி.மு.க. கொடியேற்று விழா

அதிமுக கொடியேற்று விழாவில் பெண்களுக்கு இலவச சேலை

Update: 2024-03-09 18:36 GMT

அதிமுக கொடியேற்று விழாவில் பெண்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் வடக்கு ஒன்றியம் காமக்காபாளையம் ஊராட்சி வேதநாயகபுரத்தில் அ.தி. மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நீலவேணி செல்வராஜ் வரவேற்று பேசினார். எம். எல். ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏழை எளிய பெண்கள் 76 பேருக்கு இலவச சேலையை வழங்கி பேசினார். விழாவில் அ.தி. மு. க. கிளை செயலாளர் ஆண்டவர் முத்துசாமி, ஊராட்சி மகளிர் அணி செயலாளர் உமா வெங்கடேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனிவேல், சரஸ்வதி செங்கோட்டுவேல், வேதனாயபுரம் கிளை செயலாளர் கண்ணன், அவைத்தலைவர்கள் வீரய்யா ஜெயா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி செயலாளர்மொட்டையன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News