அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

சேலத்தில் மாவட்ட கல்வித்துறை சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.;

Update: 2024-03-14 05:18 GMT

விழிப்புணர்வு பேரணி 

அரசு பள்ளிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட கல்வி துறை சார்பில் சேலத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிய, ஆசிரியைகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டியை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.
Tags:    

Similar News