ரூ.6.30 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய், பருப்பு
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்த தேங்காய் மூட்டைகள்
Update: 2024-03-08 18:10 GMT
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 25 விவசாயிகள் 203 மூட்டைகளில் 83 குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர்.
அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டதில் 6லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.