சேலம் ஐடிஐ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-01 07:30 GMT
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் சங்கம் சார்பில், தொழிற்பயிற்சி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கிளை செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.