ஓமலூரில் சேலம் சரக டிஐஜி ஆய்வு
ஓமலூரில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு திடீர் ஆய்வு நடத்தினார்.
By : King 24x7 Website
Update: 2023-10-26 00:43 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தீடீரென இன்று ஆய்வு செய்தார். அதில் ஓமலூர் காவல்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், தீவட்டிப்பட்டி மற்றும் தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள், திருட்டு வழக்குகள் மற்றும் ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் பணிச்சுமை குறித்தும் மற்றும் காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.