சேலம் : போக்குவரத்து விதிகளை மீறிய 161 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் இயக்கிய 161 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2024-03-17 09:06 GMT

பைல் படம் 

சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சாலை விபத்துக்களை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு மற்றும் தற்காலிகமாக ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 37 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 11 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 10 டிரைவர்கள், சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 35 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 27 பேர் உள்பட 161 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
Tags:    

Similar News