சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்: ரூ.34 லட்சம் உண்டியல் காணிக்கை
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.34 லட்சம் உண்டியல் காணிக்கை விழுந்துள்ளது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவிலில் 4 நிரந்த உண்டியல்களும், புதிதாக 5 எவர்சில்வர் உண்டியல்களும் மற்றும் 5 தற்காலிக உண்டியல்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் இருந்த 14 உண்டியல்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டன. இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
முடிவில் ரூ.34 லட்சத்து 239, 142 கிராம் தங்கம், 699 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இதில் கோவில் அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.