சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழக செயலாளர் வெட்டிக்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழக செயலாளர் வெட்டிக்கொலை. போலீசார் விசாரணை.

Update: 2024-07-04 07:32 GMT

கொலை

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர். இந்த நிலையில் சண்முகம் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி,கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து உடலை எடுப்பதற்கு அனுமதிக்காமல் அதிமுகவினர் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.மேலும் 4மணி நேரத்திற்கு மேலாக உடலை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான குவிந்தனர். பின்னர் நான்கு மணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
Tags:    

Similar News