சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி

சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2024-02-03 15:29 GMT
கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கு மாநில அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடக்கிறது

ஆண்கள் பிரிவில் 16 அணி வீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணி வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். நேற்று 2-ம் நாள் கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் இன்று (சனிக்கிழமை) அரை இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அன்று இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெறும் அணி வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்குகிறார்.

போட்டியில் வெற்றி பெறும் ஆண்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை சேலம் மாநகர தி.மு.க.விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தகண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News