சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கு - இரட்டை சகோதரிகள் கைது

சேலம் வெள்ளி வியாபாரியின் கொலை வழக்கில் மேலும் இரட்டை சகோதரிகள் கைது. முக்கிய குற்றவாளியான பிரபல ரவடியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-12 11:40 GMT

சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கு - இரட்டை சகோதரிகள் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (45), வெள்ளி வியாபாரி. இவர் கடந்த 2-ந் தேதி காலை பால் வாங்க சென்ற போது கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய செவ்வாய்ப்பேட்டை போலீசார் சங்கரின் தங்கை கணவர் சுபாஷ்பாபுவை கைது செய்தனர். அவர் தனது வாக்கு மூலத்தில் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்ததற்கும், குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்ததற்கும் சங்கர் தான் காரணம் என்று கூறி ரூ. 2 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி சங்கரை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலைக்கு உதவியதாக சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த அப்துல் முனாப் (30), கருங்கல்பட்டி கல்கி தெருவை சேர்ந்த பிரபல ரவுடி வேலாயுதம் (38), காடையாம்பட்டி பிரதாப் (30), ஈரோடு கவுந்தம்பாடி நாகராஜன் (28 )ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் . மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பவானியில் மீட்கப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலையை திட்டம் போட்டு அரங்கறே்றியது பிரபல ரவுடியான கோழி பாஸ்கர் என்பதும் அதற்கான திட்டத்தை கோழி பாஸ்கரின் இரட்டை சகோதரிகளான அழகாபுரம் காட்டூரை சேர்ந்த கீதா (42), லதா (42) ஆகியோர் வீட்டில் வைத்து திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது., இதையடுத்து நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கிறார்கள். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கோழி பாஸ்கர் மற்றும் அவரது தம்பி ராஜா ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றி வருகிறார்கள். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News