தேசிய குதிரையேற்ற போட்டியில் சேலம் மாணவர் சாதனை
தேசிய குதிரையேற்ற போட்டியில் சாதித்த செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Update: 2024-02-26 05:16 GMT
சேலம் செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் வ.ரா.ஹயக்ரீவா . இவர், குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கோப்பைகளையும் பெற்று சாதித்து வருகிறார். இதற்கிடையே சேலம் கைலாஷ் மான்சரோவர் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் பல்வேறு பிரிவுகளில் மாணவன் வ.ரா.ஹயக்ரீவா பிள்ளை கலந்து கொண்டு 3 தங்கம் பெற்று சாதனை படைத்தார். சாதனை மாணவனுக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்களை கைலாஷ் மான்சரோவர் பள்ளி இயக்குனர் கிரண்குமார், முதல்வர் அஸ்வினி பிரியா ஆகியோர் வழங்கி பாராட்டினர். சாதனை மாணவர் பள்ளி முதல்வர் ஸ்டான்லியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாணவனை பயிற்சியாளர் சந்துரு, மாணவனின் தாய் வக்கீல் ராஜராஜேசுவரி மற்றும் ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.