சர்வதேச கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற சேலம் மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.;
Update: 2024-05-20 09:02 GMT
பதக்கம் வென்றவர்கள்
மலேசியாவில் கடந்த வாரம் சர்வதேச கராத்தே போட்டிகள் நடந்தன. இதில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் சேலம் சிசோகாய் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்து இந்தியாவிற்கும், சேலத்திற்கும் பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர் சஞ்சய், மாதவன், விகாஸ், வீராங்கனை கனிஷ்கா, தயா கார்த்திக், வெள்ளிப்பதக்கம் வென்ற பிருந்தா, ரகுநாதன், வெண்கலப்பதக்கம் வென்ற யஸ்வந்த் ஆகியோரை சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலாளர் மாஸ்டர் சரவணன் மற்றும் பெற்றோர்கள், கராத்தே வீரர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து சேலம் வருகை தந்த கராத்தே வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.