பணத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
தற்கொலை செய்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை;
Update: 2024-02-18 11:13 GMT
இளம்பெண் தற்கொலை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை.
இவருடைய மனைவி சத்யா(34). அதே ஊரை சேர்ந்தவர் டிராக்டர் உரிமையாளர் செல்வபிரபு (29). இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது செல்வபிரபு சத்யாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபிரபுவை கைது செய்தனர்.