மணல் திட்டில் மோதி விபத்து - விற்பனை பிரதிநிதி பலி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே மண் திட்டின் மீது டூவீலர் மோதி பள்ளத்தில் விழுந்ததில் விற்பனை பிரதிநிதி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-08 07:44 GMT

விற்பனை பிரதிநிதி பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே குள்ளப்பா  நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார், 34. தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர் வேலை முடிந்து நேற்று அதிகாலை 02:15 மணியளவில், தனது ஹீரோ பேஷன் புரோ டூவீலரில் ஈரோட்டிலிருந்து குமாரபாளையம் கோட்டைமேடு சர்வீஸ் ரோடு திரும்பும் இடத்தில் வந்தபோது, அங்கிருந்த மண் திட்டின் மீது மோதி நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரது டைரியை பார்த்து, குடும்பத்தாருக்கு போன் செய்ய நேரில் வந்த அவர்கள் தனியார் அம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் வழியில் இவர் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News