ராசிபுரம் அருகே விடிய விடிய சமபந்தி கறி விருந்து
ராசிபுரம் அருகே விடிய விடிய சமபந்தி கறி விருந்து நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் விடிய , விடிய முப்பூஜை திருவிழா பெண்கள் உட்பட 15,000 பேருக்கு சுட சுட கறி விருந்து.
2500 கிலோ கறி, 1000 கிலோ பச்சரி சமைத்து கிராமம் செழிக்க 300 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் தெய்வ வழிபாடு செய்தனர். 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.
சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள்,ஆண்கள் என ஆயிரக்கணக்கான கிராமக்கள் விருத்தில் கலந்து கொண்டனர். காலம் காலமாக வறட்சி இன்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ கடந்த 100 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருவது குறிப்பிடதக்கது.
பெண்கள் இரவு முழுவதும் வரிசையில் நின்று அன்னதானத்தில் பங்கேற்ப்பது சிறப்பு . இராசிபுரம் அடுத்து அருகே ஆர்.புதுப்பட்டியில் உள்ளது கள்ளவழி கருப்பனார் கோயில் , போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதேறும் தை கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் முப்பூஜை திருவிழா விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் கள்ளவழி மலை மேல் இருக்கும் கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு , கோழி ,பன்றிகளை பலியிட்டனர். மேலும் காவு சோறு கூறை விட்டு விசேஷ பூஜை செய்தனர். இவ்விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் விடிய விடிய பங்கேற்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி , ஆடு,கோழி மற்றும் பன்றி கொண்டு வந்து சுவாமிக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.