புனித சூசையப்பர் ஆலயத்தில் சமபந்தி விருந்து
நாசரேத் கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடந்த சமபந்தி விருந்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குக்குட்பட்ட கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 10 ம்தேதி கொடியேற்றத்துடன் தொட ங்கி 10 நாட்கள் நடந்தது. 9ம் திருவிழா மாலை 6 மணிக்கு தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு அடிகளார் தலைமையில் மாலை சிறப்பு ஆராதனை நடந்தது.
10ஆம்திருவிழாவன்று மாலை 5.30 மணிக்கு ஜெப மாலையும், மாலை 6 மணி க்கு திருவிழா திருப்பலியும் வள்ளியூர் இசிதோர் அடிகளார் தலைமையில் பிரகாசபுரம் பங்கு த்தந்தை சலேட் ஜெரால்ட் முன்னி லையில் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு மாலை 7 மணி க்கு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது.இதில்திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் மற்றும் கந்தசாமிபுரம் அருட்சகோதரிகள், இறைமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.