திருக்கோவிலூரில் சமஸ்டி உபநயனம்
திருக்கோவிலூரில் சமஸ்டி உபநயனம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 09:51 GMT
உபநயனத்தில் கலந்து கொண்டவர்கள்
தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம்9 சார்பில் திருக்கோவிலூரில் நான்கு சிறுவர்களுக்கு சமஸ்டி உபநயனம் செய்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பிராமணர்கள் சங்க, திருக்கோவிலூர் கிளையின் சார்பில், சமஸ்டி உபநயனம் செய்வதற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர், மணம்பூண்டி கிளை நிர்வாகிகள் செய்து வந்தனர். இன்று காலை 9:30 மணிக்கு வாசவி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியர் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
நான்கு சிறுவர்களுக்கு சமஸ்டி உபநயனம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் திரளான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.