சமத்துவ பொங்கல் விழா
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.;
Update: 2024-01-14 11:21 GMT
பொங்கல் கொண்டாட்டம்
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்யநாராயணன் முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி, தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் கலைவாணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.