சமத்துவ பொங்கல் விழா : மும்மத குருக்கள் பங்கேற்பு

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, முஸ்லிம், கிறித்துவ மத குருமார்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Update: 2024-01-16 03:01 GMT

சமத்துவ பொங்கல் 

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ், உதவி ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.

இதில் இந்து மகாசபா ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் சர்மா,புனித சூசையப்பர் திருத்தல  சார்லஸ்,டவுன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் முகமது அலிபாசில் அன்வாரி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு சிறப்புரையாற்றினர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம் சீனிவாசன, வீராச்சாமி, பாபு, முத்து முருகன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, தாமோதர கண்ணன், தயாள் சங்கர், கருப்பசாமி, ஜெகநாதன் கிருஷ்ணசாமி உள்பட ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார். . இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ், உதவி ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார். இதில் இந்து மகாசபா ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் சர்மா,புனித சூசையப்பர் திருத்தல  சார்லஸ்,டவுன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் முகமது அலிபாசில் அன்வாரி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு சிறப்புரையாற்றினர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம் சீனிவாசன, வீராச்சாமி, பாபு, முத்து முருகன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, தாமோதர கண்ணன், தயாள் சங்கர், கருப்பசாமி, ஜெகநாதன் கிருஷ்ணசாமி உள்பட ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News