சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.78.89 லட்சம் உண்டியல் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.78.89 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.;

Update: 2024-06-28 03:17 GMT
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.78.89 லட்சம் உண்டியல் காணிக்கை

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 

  • whatsapp icon

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். அப்போது கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.78 லட்சத்து,89 ஆயிரத்து,648 ரொக்கமும்,2 கிலோ 075 கிராம் தங்கமும், 3 கிலோ 210 கிராம் வெள்ளியும், 140 அயல்நாட்டு நோட்டுகளும், 854 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

Tags:    

Similar News