கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான மாதிரி நேர்முக தேர்வு

கூட்டுறவுச் சங்க உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் நாளை நடைபெறுகிறது.

Update: 2024-01-10 06:15 GMT
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 
விருதுநகர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தினால் உதவியாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில்,இத்தேர்விற்கான நேர்முகத்தேர்வு வரும் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வில் வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,இம்மாதிரி நேர்காணலில் கலந்து கொள்பவர்களுக்கு நேர்காணல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்களை கொண்டு 11.1.2024 அன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இம்மாதிரி இலவச நேர்காணலினை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பங்கேற்க studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News