மினி லாரியில் மணல் கடத்தல் : டிரைவர் கைது

காயல்பட்டினத்தில் மினி லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.;

Update: 2024-01-24 05:35 GMT

கைது 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலையில் காயல்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காயல்பட்டினம் பீச் ரோடு செல்லும் வழியில் உள்ள அப்பா பள்ளிதெரு சந்திப்பில் ஒரு மினி லாரி வேகமாக வந்துள்ளது. அதை கைகாட்டி நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், அந்த மினிலாரி நிற்காமல் சென்றது. போலீசார் ஓடிச்சென்று அந்த லாரியை மடக்கிநிறுத்தினர்.

Advertisement

அப்போது அதில் இருந்து ஒரு நபர் கீழ குதித்து தப்பி ஓடினார். பின்னர் மினி லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குரங்கணி அருகே உள்ள வடக்கு கோட்டூர் சின்னத்துரை மகன் தேவராஜன் என்பதும், அந்த மினி லாரியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றி கடத்தி வந்ததும் ஆற்று மணலை அங்கமங்கலம் தோணி பாலத்தை சேர்ந்த வேல் என்பவர் மினி லாரியில் ஏற்றி அனுப்பி விட்டதாகவும், லாரியில் இருந்து தப்பி ஓடியவர் கல்லாம்பாறையை சேர்ந்த லாலா என்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் மினி லாரியை பறிமுல் செய்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு தேவராஜனை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News