பாலாற்றில் மணல் கடத்தல் : மாட்டு வண்டி பறிமுதல்
பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-05-22 11:12 GMT
மணல் கடத்தல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பாலாற்று பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிகொண்டா சாவடி, சிவன் கோயில் அருகே மாட்டு வண்டியை ஓட்டி சென்றவர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.பின்னர் அந்த மாட்டு வண்டியை போலீசார் சோதனை செய்த போது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் ப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.