மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கள்ளகுறிச்சி மாவட்டம், கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-03 10:59 GMT
கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டி.ஒரத்துார் கிரமம் அருகே கெடிலம் ஆற்றில் சிலர் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதைப் பார்த்து போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் மணல் அள்ளிய நபர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.