ஆற்றில் மணல் திருட்டு - டாரஸ் லாரிகள் சிறை பிடிப்பு
பேச்சிப்பாறை அணை அருகே ஆற்றில் மணல் திருடிய 4 டாரஸ் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை இந்த அணையின் நீர் குமரி மாவட்டம் மட்டுமின்றி ராதாபுரம் தாலுகா பகுதிகளுக்கும் பாசன வசதி அளிக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் பாய்ந்து செல்லும் ஆற்றில் இருந்து கடந்த சில நாட்களாக மண் மற்றும் மணல் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது.
அருகே நடைபெறும் சாலை பணியை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் நீண்ட நாட்களாக இவற்றை எடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மண் வெட்டி எடுக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் பொது மக்களுக்கு ஆதரவாக ஊராட்சி தலைவர் தேவதாஸ் உட்பட பலர் அங்கு வந்து லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்