அனைத்து மதத்தினர் பங்கேற்ற சந்தனக்கூடு விழா‌

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி நார்த்-டி பகுதியில் மொய்தீன் ஆண்டவர் தர்காவில்நடந்த சந்தனக்கூடு விழாவில் அனைத்து மதங்களை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-01-30 03:08 GMT

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி நார்த்-டி பகுதியில் மொய்தீன் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டும் 44 வது ஆண்டாக சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த சந்தனக்கூடு விழாவில் அப்பகுதி மட்டுமல்லாமல் பொன்மலைப்பட்டி, பாலக்கரை, ஆழ்வார் தோப்பு, மற்றும் அரியலூர், புதுக்கோட்டை ,தஞ்சாவூர்பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஜாதி மத பேதமின்றி சமத்துவமான முறையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் .

Advertisement

இந்த நிகழ்வில் தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சியும் தர்காவில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். விழாவின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது. கவுஸ் பாஷா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நிசான் கமிட்டியை சேர்ந்த பன் பக்ருதீன், மகபூப் பாஷா, சதாம் உசேன், முஸ்தக் பாஷா, பதுருதீன், அஷ்ரப் ஆகியோர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News