சந்தனக்கூடு திருவிழா - ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
தேவகோட்டை ஒத்தக்கடையில் உள்ள மகான் நாகூர் ஹஜ்ரத் சாகுல்ஹமீது ஒலியுல்லா தர்காவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு நடத்தினர்.;
Update: 2024-01-04 08:34 GMT
சந்தனக்கூடு திருவிழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒத்தக்கடையில் உள்ள மகான் நாகூர் ஹஜ்ரத் சாகுல்ஹமீது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, தர்காவில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற மதங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்