லட்சுமி விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி
Update: 2023-12-01 17:02 GMT
லட்சுமி விநாயகர்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள லட்சுமி விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையட்டி பக்தர்கள் விநாயக பெருமானுக்கு அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்மங்கி போன்ற மாலைகளை அணிவித்து தரிசனம் செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர், மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் விநாயகர், அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.