ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை..
Update: 2023-12-01 10:12 GMT
இரட்டை விநாயகர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயக கோவிலில் கார்த்திகை மாத சர்வ சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக இரட்டை விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரணை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.