பாலமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

சங்ககிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது

Update: 2024-02-17 00:53 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவராஜா மண்டபத்தில் உள்ள அருள்மிகு பாலமுருகன் சுவாமிக்கு கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கிருத்திகையையொட்டி சங்ககிரியை அடுத்த தேவராஜா மண்டப வளாகத்தில் உள்ள அருள்மிகு பாலமுருகன்சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News