அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 92% தேர்ச்சி
சங்ககிரி: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 16:29 GMT
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 122 பேர் தேர்வு எழுதியதில் 112 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளியளவில் 482 மதிப்பெண்கள் பெற்று மதுமிதா முதலிடத்தையும், ஷிரியா 481 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், ரக்ஷிதா 480 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் தன்யா, மதுமிதா, ஷிரியா ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி அடைந்த மாணவிகளை பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் 92% தேர்ச்சி பெற்றனர்.