சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

Update: 2023-12-20 16:23 GMT

சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு சந்தோஷசனிபகவான் சுவாமிக்கு சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனிப்பெயர்ச்சியையொட்டி அருள்மிகு சந்தோஷசனிபகவான் உடனமர் நீலாதேதவி சுவாமிகளுக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை சுமார் 5.20 க்கு மணிக்கு சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கராம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனி பகவான் உடனமர் நீலாதேவியுடன் சேர்ந்து இருப்பதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News