பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

Update: 2023-12-21 10:04 GMT

பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா  

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத அக்கினேஸ்வர சுவாமி திருக்கோவிலில் தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார் . 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News