ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Update: 2023-12-21 06:36 GMT

சனி பெயர்ச்சி விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஹோம பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் நவக்கிரகங்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு பால்,தயிர்,திருமஞ்சனம்,மஞ்சள், சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர்,பன்னீர், அரிசி மாவு,கரும்புச்சாறு, சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் எள்ளுருண்டை வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தை ஸ்ரீ கைலாசநாதர் ஆலய அர்ச்சகர் சிவ ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், சிவஸ்ரீ ஸ்ரீ மது சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மற்றும் கட்டளைதாரர்கள் சிறப்பு ஏற்பாட்டையும் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

Tags:    

Similar News