சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ அபிஷேகம்
முத்தூர் மற்றும் நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாச்சியம்மன் உடன மர் சோழீஸ்வரர் கோவில், செங்கோடம்பாளையம், சோமையநல்லூர் மங்கள கருணாம்பிகா உட னமர் கைலாயநாதர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில் மற்றும் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், மருதுறை பச்சை மரகதவள்ளி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பங்குனி மாத சனிப்பிரதோஷ சிறப்பு அபிஷேக பூஜை நேற்று மாலைநடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இந்த கோவில்களில் உள்ள நந்தி எம்பெருமான் மற்றும் சிவன், பார்வதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட் டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற் றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவன் கோவில் பிரதோஷ மாத வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.